பாகிஸ்தான் கராச்சி விமான விபத்து எதிரொலி: 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்

பாகிஸ்தான் கராச்சி விமான விபத்து எதிரொலி: 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்
பாகிஸ்தான் கராச்சி விமான விபத்து எதிரொலி: 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம், 70-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 74-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. போலிச் சான்றிதழ்கள் மூலம் பணி பெற்ற 26 நபர்கள் , முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தற்காக 31 நபர்கள் , விதிமுறைகளை பின்பற்றாததற்காக  6 நபர்கள், நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களைச் சேதப்படுத்தியதற்காக 4 நபர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக ஒருவர், அரசாங்க ஆவணங்களைத் திருடியதற்காக 3 நபர்கள், தவறான நடவடிக்கைகளை எடுத்ததற்காக 2 நபர்கள் என 70 க்கும் மேற்பட்டோர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களைத் தவிர்த்து 4 நபர்கள் மீது பணிஉயர்வு சம்பந்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் படி, கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 177 நபர்கள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. கடந்த மே 22 ஆம் தேதி லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் ஜின்னாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் 97 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்திற்கு விமானம் ஓட்டி வந்த விமானிகள் மற்றும் அவர்களை அறையிலிருந்து செயல்படுத்திய அதிகாரிகளே காரணம் என விசாரணையில் தெரிய வந்த நிலையில்  விமானத்துறை அமைச்சரின் உத்தரவிற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com