சிந்து நதிக்கரையில் கிடைக்கும் தங்கம்
சிந்து நதிக்கரையில் கிடைக்கும் தங்கம்புதியதலைமுறை

பாகிஸ்தான் | சிந்து நதியில் மணலுடன் டன் கணக்கில் கொட்டிக் கிடக்கும் தங்கம்.. படையெடுக்கும் மக்கள்!

பாகிஸ்தான், அட்டாக் மாவட்டத்தில் காபூல் ஆறும் சிந்து நதியும் கலக்கும் இடத்தில் மணலுடன் டன்கணக்கான தங்கம் கொட்டிக்கிடக்கிறது
Published on

பாகிஸ்தான், அட்டாக் மாவட்டத்தில் காபூல் ஆறும் சிந்து நதியும் கலக்கும் இடத்தில் மணலுடன் டன்கணக்கான தங்கம் கொட்டிக்கிடக்கிறது

பொதுவாக நல்ல காலம் பிறந்து விட்டால் பணமோ.. நகையோ... கூரையை பிச்சுக்கொண்டு கொட்டும் என பழமொழி சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.. இது நிஜ வாழக்கையில் சாத்தியமில்லை அநேக பேருக்கு சாத்தியம் இல்லைதான்..

ஆனால் இங்கு அரங்கேறிய ஒரு சம்பவம் தான் இந்த பழமொழியை உண்மையாக்கியுள்ளது. ஆற்று மணலுடன் கலந்து தங்கம் வந்து கொண்டே இருக்கிறது. மொத்த மக்களும் அங்குதான் படையெடுத்து செல்கின்றனர். எங்கே தெரியுமா பார்க்கலாம் இந்த காணொளியில்..

பாகிஸ்தான், அட்டாக் மாவட்டத்தில் காபூல் ஆறும் சிந்து நதியும் கலக்கும் இடத்தில் இந்த தங்கம் கிடைக்கிறது. இப்பகுதியில் தங்கம் மட்டுமல்லாமல் விலை மதிப்பற்ற தாதுக்கள் பல ஆண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது. புவியியல் ஆய்வு அறிக்கையின்படி, சிந்து நதி பகுதியில் பல டன் கணக்கில் இருக்கும் இந்த தங்கத்தின் மதிப்பானது பல பில்லியன் ரூபாய் அதாவது குறைந்தது 60 ஆயிரம் கோடி மதிப்பு இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த தங்கம் குளிர்கால மாதங்களில் ஆற்றின் நீர் மட்டம் குறையும் போது ஆற்று மணலுடன் கலந்த பிரகாசமான துகள்களாக தோன்றும் என கூறப்படுகிறது.

அதனால் நீர்மட்டம் குறையும் நாட்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சட்டவிரோதமாக தங்கத் துகள்களை சேகரித்துச் செல்கின்றனர். ஒரு சிலர் கனரக இயந்திரங்களை கொண்டு தங்கத்தை பிரித்து எடுத்து செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தங்கத்தை எடுப்பதற்கான எந்த முயற்சியையும் அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், சட்டவிரோதமாக தங்கம் எடுக்க அரசு தரப்பில் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடானாது கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பொருங்களின் விலை அதிகமாகி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தான் அரசு இதனை கையில் எடுக்கும் சூழலில் அந்நாட்டு பொருளாதாரத்தில் மாற்றங்கள் நிகழலாம் என்று கருதப்படுகிறது.

இமையமலையில் உற்பத்தியாகும் இந்த நதியானது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுமார் 3200 கிமீ தூரம் பாய்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு தற்போது தங்கம் இருக்கும் நதியின் பகுதிகள் இந்தியாவின் வசம் இருந்தது. இது உலகின் பழையான நதிகளில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நதியும் கூட. சிந்து சமவெளி நாகரத்தில் ஆதாரமே இதுதான். தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com