\
Pakistan Gwadar Port project has become a liability for China
Model imagegoogle gemeni

பெரும் முதலீடு.. பாக். நம்பியதால் மோசம்.. கண்ணீர் வடிக்கும் சீனா!

சீனா தனது செயல்பாடுகளைச் சுருக்கிக் கொண்டு, இத்துறைமுகத்தை வெறும் கடற்படை எரிபொருள் நிரப்பும் மையமாக மட்டும் மாற்றக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Published on: 
Summary

சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் (CPEC) மையப் புள்ளியாகக் கருதப்பட்ட பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் தற்போது சீனாவிற்கு எதிர்பார்க்கப்பட்ட வர்த்தகப் பலன்களைத் தராமல் ஒரு பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது. பில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டபோதிலும், துறைமுகத்தைப் பராமரிப்பதற்கான செலவைக்கூட அதன் வணிக வருவாயால் ஈடுகட்ட முடியவில்லை.

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியிலுள்ள பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில், அரேபியக் கடலின் கடலோரப் பகுதியில் குவாடர் துறைமுகம் (Gwadar Port) அமைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) மிக அருகில் இத்துறைமுகம் அமைந்துள்ளது. சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் (CPEC) மையப் புள்ளியாகக் கருதப்பட்ட இந்த குவாடர் துறைமுகம், தற்போது சீனாவிற்கு எதிர்பார்க்கப்பட்ட வர்த்தகப் பலன்களைத் தராமல் ஒரு பாதுகாப்புச் சுமையாக மாறியுள்ளது. காரணம், பில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டபோதிலும், துறைமுகத்தைப் பராமரிப்பதற்கான செலவைக்கூட அதன் வணிக வருவாயால் ஈடுகட்ட முடியவில்லை. அடுத்து, பாகிஸ்தான் சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடியால், CPEC திட்டங்களுக்கான தனது பங்களிப்புத் தொகையை வழங்க முடியாமல் தவிக்கிறது.

Gwadar Port
Gwadar Portreuters

சீனா வழங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நீடிப்பதால், மேலதிக நிதியை குவாடரில் முதலீடு செய்ய சீனா தயங்குகிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் நேரடியாகப் பெரும் தொகையை முதலீடு செய்யாமலேயே, சீன நிதியின் மூலம் உற்பத்தித் திட்டங்களைப் பெற்றுள்ளது.

அடுத்து, துறைமுக இயக்க ஒப்பந்தங்களின்படி, வர்த்தகப் போக்குவரத்தில் பெரிய லாபம் வரவில்லை என்றாலும், துறைமுக வருவாயில் ஒரு குறிப்பிட்ட பங்கு (சுமார் 9%-10%) பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து கிடைக்கிறது. பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) போன்ற அமைப்புகள் சீனத் திட்டங்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல்களால், திட்டங்களின் பாதுகாப்பிற்காகச் சீனா கூடுதல் நிதியைச் செலவிட வேண்டியுள்ளது. இன்னொரு புறம், பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) போன்ற அமைப்புகள் சீனத் திட்டங்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல்களால், திட்டங்களின் பாதுகாப்பிற்காகச் சீனா கூடுதல் நிதியைச் செலவிட வேண்டியுள்ளது.

மேலும், மலாக்கா நீரிணைப் பாதையைத் தவிர்த்து, குவாடரிலிருந்து காரகோரம் மலைத்தொடர் வழியாகச் சீனாவுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வது கடல்வழியைவிடக் கூடுதல் செலவும், ஆபத்தும் நிறைந்ததாக உள்ளது. தவிர இப்பகுதியின் இயற்கை வளங்களைச் சீனாவும் பாகிஸ்தான் மத்திய அரசும் சுரண்டுவதாகவும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் சீனா தனது செயல்பாடுகளைச் சுருக்கிக் கொண்டு, இத்துறைமுகத்தை வெறும் கடற்படை எரிபொருள் நிரப்பும் மையமாக மட்டும் மாற்றக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ (BRI) திட்டத்தின் பிரதான அடையாளமாக விளங்கிய குவாடர் துறைமுகம், தற்போது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் சீனாவிற்கு பொருளாதார ரீதியாக ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com