'இனி அவர் பிழைப்பது கடினம்' பாக். முன்னாள் அதிபர் முஷாரப் குறித்து குடும்பத்தினர் தகவல்

'இனி அவர் பிழைப்பது கடினம்' பாக். முன்னாள் அதிபர் முஷாரப் குறித்து குடும்பத்தினர் தகவல்
'இனி அவர் பிழைப்பது கடினம்' பாக். முன்னாள் அதிபர் முஷாரப் குறித்து குடும்பத்தினர் தகவல்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் காப்பாற்றக்கூடிய கட்டத்தை அவர் கடந்து விட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 3 வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து குணமடைய முடியாத கடினமான கட்டத்தில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முஷாரப்பின் ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் “முஷாரப் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது வெண்டிலேட்டரில் இல்லை. குணமடைய வாய்ப்பில்லாத, உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும் கடினமான கட்டத்தில் அவர் இருக்கிறார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் பிறந்த முஷாரப், பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து படிப்படியாக உயர்ந்து 1998 ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தின் ஜெனரலாக பதவியேற்றார். 1999 ஆம் ஆண்டு பாக். அரசு கலைக்கப்பட்டு ராணுவம் அங்கு ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து 2001 ஆம் ஆண்டு பாக். அதிபராக பதவியேற்றார் முஷாரப். 2008 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் அவர் நீடித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com