\
பாக். வெள்ளப் பேரழிவு - அதிர்ச்சியளிக்கும் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்ட நாசா!

பாக். வெள்ளப் பேரழிவு - அதிர்ச்சியளிக்கும் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்ட நாசா!

பாக். வெள்ளப் பேரழிவு - அதிர்ச்சியளிக்கும் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்ட நாசா!
Published on

பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவு குறித்த செயற்கைகோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்றுள்ள ஐ. நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா கட்டர்ஸ் (ANTONIA GUTERRES), வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் மஞ்சார் (MANCHAR) ஏரி நிரம்பி கால்வாய்கள் உடைந்திருப்பதன் செயற்கைகோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 25ஆம் தேதி சுற்றி வறண்ட நிலையில் அமைதியாக காணப்பட்ட ஏரியின் புகைப்படமும், ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதிகளில் ஏரி நிரம்பி கால்வாய் உடைப்பால் உபரிநீர் வெளியேறிய போது எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com