பாகிஸ்தான் விமான விபத்தில் 35 பேர் பலி ?

பாகிஸ்தான் விமான விபத்தில் 35 பேர் பலி ?
பாகிஸ்தான் விமான விபத்தில் 35 பேர் பலி ?

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் உள்ள லாகூரிலிருந்து கராச்சி நோக்கிச் சென்ற ஏர்பஸ்-320 ரக விமானத்தில் 90 பயணிகள் சென்றனர். இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் ஒரேயொரு பயணி மற்றும் உயிர் தப்பி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் எந்திரத்தைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் குடியிருப்பு பகுதிகளையொட்டி விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com