உயிர் காக்கும் மருந்துகள் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்!

உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகளைத் தங்கள் நாட்டுக்கு தந்து உதவுமாறு ஈரானை, பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சிக்கல் 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. அன்னியச்செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களைக்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இயலாத நிலை உள்ளது. நோயாளிகளின் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய இயலாதஅளவுக்கு, பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் மருத்துவச் சேவைகள் துறை அமைச்சர் நதீம் ஜான், ஈரான் தூதர் ரெசா அம்ரி மொகட்டமை சந்தித்துப் பேசினார். அப்போது அத்தியாவசிய மருந்துகளை விரைந்து அனுப்பி உதவுமாறு ஈரான் தூதரை பாகிஸ்தான் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com