‘படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. நாசமாகும் பயிர்கள்’ - எமெர்ஜென்சி அறிவித்த பாகிஸ்தான்

‘படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. நாசமாகும் பயிர்கள்’ - எமெர்ஜென்சி அறிவித்த பாகிஸ்தான்

‘படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. நாசமாகும் பயிர்கள்’ - எமெர்ஜென்சி அறிவித்த பாகிஸ்தான்
Published on

பாகிஸ்தானில் கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்களை தாக்கியுள்ளன. வெட்டுக்கிளிகள் படையெடுப்பை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் கூட்டமாக படையெடுத்துவரும் வெட்டுக்கிளிகள், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசம் செய்துவிட்டு பறந்துவிடுகின்றன. இதனால் பருத்தி, கோதுமை உள்ளிட்ட பயிர்கள் வீணாகியுள்ளன. இந்த வெட்டுக்கிளிகள், பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஈரானிலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் வந்தவை. பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பயிர்களை அழித்தன. தற்போது பாகிஸ்தான் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையில் உள்ள பாலைவனப் பகுதியான சோலிஸ்தான் வரை பரவியிருக்கிறது.

அவ்வாறு பரவிய வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களுக்குள்ளும் புகுந்து சில மணி நேரத்தில் மொத்த கோதுமை பயிர்களையும் அழித்து விவசாயிகளை அதிர்ச்சியில் உறையவைத்தன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனம் வெதும்புகின்றனர் விவசாயிகள். குஜராத்தில் தண்டோரா ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டுகின்றனர்.

வெட்டிக்கிளிகள், பாகிஸ்தானை தாக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு கடுமையான பாதிப்பை சந்தித்தது பாகிஸ்தான். இதை மிஞ்சும் வகையில் தற்போது லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருவதால், பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள பிரதமர் இம்ரான்கான் 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். ஈரப்பதமான காற்று, அதிக பனி காரணமாக இந்த வெட்டிக்கிளிகள் கூட்டம் கூட்டமாக நாடுவிட்டு நாடு வந்து தாக்குவதாக கூறியிருக்கும் ஐநா சபை, பருவநிலை சரியானால் மட்டுமே இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com