இந்தியா இஸ்ரேல் இடையே உறவு நெருக்கமாவது தெற்காசியப் பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை பாகிஸ்தான் வெகு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். பொதுவாக பிற நாட்டுத் தலைவர்களின் பயணங்களில் அதிக கவனம் செலுத்தாத பாகிஸ்தான் அரசு, மோடியின் இஸ்ரேல் பயணத்தை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதாக அவர்கள் கூறியுள்ளனர். ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் இஸ்ரேலுடான உறவின் மூலம் இந்தியா அதிக பலன்களை பெற்று வருவதாகவும், இது தெற்காசிய பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் அச்சம் கொள்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.