\
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 17 பேர் உடல் சிதறி பலி

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 17 பேர் உடல் சிதறி பலி

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 17 பேர் உடல் சிதறி பலி
Published on

பாகிஸ்தானின் குவெட்டாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் சர்பிராஸ் புக்தி, குவெட்டா நகரின் பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் குண்டுவெடித்துள்ளது. ராணுவ வாகனம்தான் குண்டு வைத்தவர்களின் இலக்கு.

இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர் என்று கூறினார். பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் அண்மைக்காலங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com