உலகம்
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் 13பேர் பலி!
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் 13பேர் பலி!
பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள தற்கொலைப் படை தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்காக பொதுமக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அங்கு திடீரென பயங்கரவாதி ஒருவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலுஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 52 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்நிலையில் அதே அமைப்பினரே தற்போதும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.