Pakistan army chief Asim Munir get daughter marriage issue
அசிம் முனீர்எக்ஸ் தளம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் மகள் திருமணம்? ரகசியமாக நடந்ததா? வெளியாகும் தகவல்!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தனது மகளின் திருமணத்தை டிசம்பர் 26 அன்று ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடத்தியதாகவும், மணமகன் அவரது சகோதரரின் மகன் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
Published on
Summary

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தனது மகளின் திருமணத்தை டிசம்பர் 26 அன்று ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடத்தியதாகவும், மணமகன் அவரது சகோதரரின் மகன் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு‘பாதுகாப்புப் படைகளின் தலைவர்’என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூரால் இந்தியாவிடம் பாகிஸ்தான் கடும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அனைத்துப் படைகளையும் வழிநடத்த வலுவான தளபதி தேவை என்ற நோக்கின் அடிப்படையில், இந்த முடிவானது எடுக்கப்பட்டது. இந்த சக்திவாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. இந்த நிலையில், ராணுவத் தளபதி அசிம் முனீர் தனது மகளின் திருமணத்தை டிசம்பர் 26 அன்று ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடத்தியதாகவும், மணமகன் அவரது சகோதரரின் மகன் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திருமணத்தில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணைப் பிரதமர் இஷாக் தார், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் மற்றும் ராணுவ பிரமுகர்கள் உட்பட சுமார் 400 பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pakistan army chief Asim Munir get daughter marriage issue
அசீம் முனீர்எக்ஸ் தளம்

பாதுகாப்பு காரணங்களால் இந்த திருமணம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே அதுகுறித்த அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாஹித் கிஷ்கோரி என்ற பாகிஸ்தானிய பத்திரிகையாளர் இதுகுறித்து உறுதிப்படுத்தும் ஒரு வீடியோவை சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததன் மூலமாகவே இந்தச் செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அசிம் முனீருக்கு மொத்த 4 மகள்கள். இதில் 3ஆவது மகளுக்குத்தான் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடைய மருமகனான அப்துல் ரஹ்மான் பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியதாகவும், பின்னர் அதிலிருந்து விலகி, ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம் சிவில் நிர்வாகத்தில் சேர்ந்து தற்போது உதவி ஆணையராகப் பணியாற்றுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pakistan army chief Asim Munir get daughter marriage issue
மீண்டும் அமெரிக்க பயணம்.. மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைக்கும் ட்ரம்ப்.. சாதிப்பாரா பாக். முனீர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com