பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை 370 ரூபாய்! கேள்விக்குறியாகும் குழந்தைகளின் ஊட்டச்சத்து!

பாலில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. முக்கியமாக கால்சியம், இது எலும்பு வளர்சிக்கும், தசை வளர்சிக்கும் மிக முக்கியம்.
பால்
பால்கூகுள்

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை 370 ரூபாய்!

பால் அனைவருக்கும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களில் ஒன்று. பாலில் உடலுக்கு தேவையான நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. முக்கியமாக கால்சியம், இது எலும்பு வளர்சிக்கும், தசை வளர்சிக்கும் மிக முக்கியம். வளரும் குழந்தைகளுக்கு பால் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தவிற, உலகெங்கும் உள்ள மக்கள், நெய், பனீர், வெண்ணெய், பாலேடு இப்படி ஏதாவது ஒரு வகையில் பால் பொருட்களை தங்களின் உணவுகளில் சேர்த்துக்கொள்வார்கள்.

இது இப்படி இருக்க... பாகிஸ்தானில் பால் மீதான வரியை அந்நாட்டு அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதனால் பாலானது ஒரு லிட்டர் 370 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பு பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலையைவிட அதிகம்.

இதற்கு காரணம், கடந்தவாரம் பாகிஸ்தானில் வெளியிடப்பட்ட தேசிய பட்ஜெடில் பாலுக்கு 18% வரி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக பாலுக்கு வரிவிலக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை ஏற்றமானது அங்கு வசித்து வரும் சாமானிய மக்களை பாதிக்கக்கூடும் என்றும், பாக்கிஸ்தானின் பணவீக்கத்தையும் அதிகரிக்கும் என்றும் ஆய்வாளார் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் 40 % மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கின்றனர். இத்தகைய மக்களுக்கு பாலின் விலையானது அழுத்தத்தை தரக்கூடும் என்கின்றனர்.

மேலும், பால் விலை ஏற்றத்தால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, வளர்சியில் பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என்கின்றனர். ஏற்கனவே பாகிஸ்தானில் இருக்கும் குழந்தைகளில் 60% பேர் இரத்த சோகைக்கு ஆளாகி உள்ள நிலையில், கூடுதலாய் கால்சியம் குறைபாடும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com