பாகிஸ்தானில் தொடரும் வெள்ளப் பாதிப்பு.. மீட்புப் பணியில் ராணுவம்!
பாகிஸ்தானில் மழை பாதிப்புகள் தொடரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை இங்கு பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா தனது இரு அணைகளில் இருந்து நீரை அதிகம் திறந்தது வெள்ள பாதிப்புகளை அதிகரித்துள்ளதாக பஞ்சாப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 17 பேர் இறந்துள்ளனர். பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சட்லெஜ், ராவி, செனாப் ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
பெரும்பாலான நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். மழை வெள்ளத்தால் கடந்த 2 மாதங்களில் மட்டும் இறந்தோர் எண்ணிக்கை 800ஐ கடந்துள்து,. இதற்கிடையே வெள்ள கட்டுப்பாட்டு பணிகளில் இந்தியா தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக தங்கள் அணைகளில் இருந்து அதிக நீரை திறந்து விடப்போவதாக இந்தியா முன்கூட்டியே 2 முறை எச்சரித்திருந்தது