பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் நூறு பேர் கொல்லப்பட்டனர்.
சிந்து மாகாணத்தில் உள்ள ஷெவான் ஷெரிப் என்ற இடத்தில் சுஃபி பிரிவினரின் வழிபாட்டுத் தலத்தில் ஏராளமானோர் திரண்டிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தனது உடம்பில் சக்திவாய்ந்த குண்டுகளை கட்டிக்கொண்டு வந்த பயங்கரவாதி, அங்கிருந்தவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவதற்காக முதலில் சில கையெறி குண்டுகளை வீசினார். பின்னர் தனது உடம்பில் இருந்த குண்டுளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார். இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் நூறு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்ரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள பிரதமர் நவாஸ் ஷெரிப், இதற்கு எதிராக மக்கள் ஒருங்கிணைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.