“பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை பாக். தடுக்கவில்லை”- சர்வதேச அறிக்கை

“பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை பாக். தடுக்கவில்லை”- சர்வதேச அறிக்கை

“பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை பாக். தடுக்கவில்லை”- சர்வதேச அறிக்கை
Published on

பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்று சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. 

நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி போன்றவற்றை கட்டுப்படுத்தும் ‘நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) அமைப்பு புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பாரிஸ் நகரில் நடைபெற்ற அதன் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இந்தக் கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது. 

அந்த அறிக்கையில், புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதலை பெரிய அளவிலான பணம் இல்லாமல் செய்திருக்க முடியாது என்றும் நிச்சயம் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு நிதி பரிமாற்றம் நடைபெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், “லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் இன்னும் கட்டுப்படுத்தவில்லை. இதனால், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியால் ஏற்படும் விபரீதத்தை குறித்து பாகிஸ்தானுக்கு புரியவில்லையா?. அதனால், அத்தகைய அமைப்புகளுக்கு செல்லும் நிதியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக, புல்வாமா தாக்குதலை தொடர்ந்து 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. அதோடு, ஜமாத்-உத்-தவா அமைப்பின் தொண்டு பிரிவு நிறுவனமான ஃபலாஹ்-இ-இன்சானியாத் என்ற அமைப்பிற்கும் பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com