லடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் ! பதற்றம் அதிகரிப்பு

லடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் ! பதற்றம் அதிகரிப்பு
லடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் ! பதற்றம் அதிகரிப்பு

லடாக் பகுதிக்கு அருகிலுள்ள சகார்டு பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இந்தியா கடந்த 6ஆம் தேதி நிறைவேற்றியது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜம்மு-காஷ்மீர் பகுதி சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருவுள்ளது. 

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் தற்போது லடாக் பகுதிக்கு அருகிலுள்ள தனது விமானப்படை தளத்தில் போர் விமானங்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதாவது லடாக் பகுதிக்கு அருகிலுள்ள சகார்டு பகுதியிலுள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்திற்கு சில போர் விமானங்களை கொண்டு சென்றுள்ளது. பாகிஸ்தான் தனது ஜெ.எஃப்-17 ரக போர் விமானத்தை அங்கு கொண்டு நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானின் இந்த நகர்வை இந்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் இந்திய ராணுவம் தீவிரமாக கண்கானித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அங்கு ராணுவ ஒத்திகை நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com