\
பாக்.முன்னாள் அதிபர் முஷாரஃப்பின் தூக்கு தண்டனை ரத்து

பாக்.முன்னாள் அதிபர் முஷாரஃப்பின் தூக்கு தண்டனை ரத்து

பாக்.முன்னாள் அதிபர் முஷாரஃப்பின் தூக்கு தண்டனை ரத்து
Published on

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப்புக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை லாகூர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தேசதுரோக வழக்கில் முஷரஃபுக்கு கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. மேலும் தூக்கிலிடுவதற்கு முன்பு அவர் இறந்து விட்டால் மூன்று நாட்கள் தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷரஃப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், முஷாரஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை அரசியலமைப்புக்கு விரோதமானது எனக்கூறி நீதிபதிகள் ரத்து செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com