அமெரிக்கா | 2025இல் மட்டும் 40,000 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்.. 14,600 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் 2025ஆம் ஆண்டில் மட்டும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் 2025ஆம் ஆண்டில் மட்டும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக 'துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம்' (GVA)அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் துப்பாக்கிச் சூட்டில் 14,600 பேர் உயிரிழந்துள்ளனர்; 26,100-க்கும்மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சராசரியாக நாளொன்றுக்கு 110-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 407 இடங்களில் பெரும் கூட்டங்களுக்கு மத்தியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இவை தவிர, சுமார் 24,000 பேர் துப்பாக்கி மூலம் தற்கொலை செய்துகொண்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி வன்முறை கலாசாரம் குறித்து சமூக ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றன.

