வங்கதேசத்தின் அகதிகள் முகாமில் சுமார் 3,40,000 ரோஹிங்யா குழந்தைகள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சத்து 40ஆயிரம் குழந்தைகள் போதிய உணவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியுமின்றி உள்ளனர். மேலும் சுகாதாரமற்ற சூழலில் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. வாரம் தோறும் 12ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் மியான்மரில் பசிக்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாவதாக கூறப்பட்டுள்ளது.
மியான்மர் ராணுவம் இனத்தூய்மை செய்ய துவங்கிய ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 600,000 ரோஹிங்யா மக்கள் ராகினே மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஐந்தில் ஒரு ரோஹிங்யா குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் உள்ளதாக யுனிசெஃப் அதிகாரி சைமன் இன்ங்ராம் ஜெனீவாவில் கூறியுள்ளார்.