\
அமெரிக்காவில் 2.92 கோடி பேர் கண்டு ரசித்த இளவரசர் திருமணம்

அமெரிக்காவில் 2.92 கோடி பேர் கண்டு ரசித்த இளவரசர் திருமணம்

அமெரிக்காவில் 2.92 கோடி பேர் கண்டு ரசித்த இளவரசர் திருமணம்
Published on

பிரிட்டன் இளவரசர் ஹாரி- மேகன் மார்க்கலின் திருமணத்தை அமெரிக்காவில் தொலைக்காட்சி வாயிலாக 2 கோடியே 92 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். 

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணம் மே 19ஆம் தேதி லண்டனில் உள்ள விண்ட்சரில் கோலாலகமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரலையாக ஒளிபரப்பியது. இந்த திருமண நிகழ்ச்சியை அமெரிக்காவில் மட்டும் தொலைக்காட்சி வாயிலாக 2 கோடியே 92 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த இளவரசர் ஹாரியின் அண்ணன் வில்லியம்ஸ் - கேத் திருமணத்தை விட கூடுதலாக 64 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். விண்ட்சரில் நடந்த திருமண ஊர்வலத்தை ஒரு லட்சம் பேர் நேரில் பார்வையிட்டனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com