அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏன் அதிகம் தெரியுமா? - ட்ரம்ப் கொடுத்த விளக்கம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏன் அதிகம் தெரியுமா? - ட்ரம்ப் கொடுத்த விளக்கம்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏன் அதிகம் தெரியுமா? - ட்ரம்ப்  கொடுத்த விளக்கம்

உலகளவில் கொரோனா வைரஸால் அமெரிக்காவே அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நியூயார்க் மற்று நியூ ஜெர்சி மாகாணங்கள் கொரோனாவால் அதிகம் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் ட்ரம்ப் அரசு திணறி வருகிறது. இந்நிலையில் அதிக அளவு பரிசோதனை நடத்துவதே எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்ற நாடுகளை விட சிறந்த அளவில் கொரோனா பரிசோதனைகளை செய்கிறது. அதனால் தான் 10லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அமெரிக்கா உள்ளது. மற்ற நாடுகள் பரிசோதனை செய்வதில் பின்தங்கி உள்ளன. அதனால் தான் எண்ணிக்கை குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com