’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் நடனம் - விருதை வெல்லுமா?

’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் நடனம் - விருதை வெல்லுமா?
’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் நடனம் - விருதை வெல்லுமா?

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்குவார்கள். இதில், திரைத்துறையில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்கர் விருதுகளில், இந்த முறை உலகமெங்கும் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள படைப்புகளின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மூன்று திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டுக்கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பரிந்துரையில் உள்ளது. ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற திரைப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதுக்கும் தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்பட ஃபீச்சருக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆஸ்கர் மேடையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் மேடையில் பாடினர்.

முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ'  தட்டிச் சென்றது. அதேபோல் முதல்முறையாக அகாடெமி விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற 64 வயதான ஜேமி லீ கர்டிஸ், 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றார்.

யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவணப்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படத்திற்காக இயக்குனர்கள் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் குனெட் மொன்கோ வென்றனர்.

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை ‘பிளாக் பேந்தர்ஸ்: விஹண்டா பார்எவர்’ (Black Panther: Wakanda Forever) படத்திற்காக ரூத் கார்டர் வென்றார். சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை தி வேல்ஸ் (The Whale) படத்திற்காக அட்ரின் மொரொட், ஜூடி சின், அனிமேரி பிராட்லி வென்றனர். சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை ‘ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்ட்டர்ன் பாண்ட்’ படத்திற்காக ஜேம்ஸ் பிரண்ட் வென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com