ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்: முக்கிய அம்சங்கள்

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்: முக்கிய அம்சங்கள்
ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்: முக்கிய அம்சங்கள்

90-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்வோம்.

இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் 13 பரிந்துரைகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறது. கிறிஸ்டோபர் நோலனின் போர்க்களத் திரைப்படமான ‘டன்கர்க்’ 8 பிரிவுகளில் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘த்ரீ பில்போர்ட்ஸ்’ திரைப்படம் ஏழு பரிந்துரைகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘தி போஸ்ட்’, சிறந்த திரைப்படத்துக்கான பரிந்துரையில் இடம்பிடித்திருக்கிறது. எனினும் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரையை ஸ்பீல்பெர்க் பெறவில்லை.

‘கெட் அவுட்’, ‘டார்க்கெஸ்ட் அவர்’, ‘லேடி பேர்ட்’ உள்ளிட்ட திரைப்படங்களும் சிறந்த திரைப்படத்துக்கான பரிந்துரைகளில் இடம்பெற்றிருக்கின்றன. டார்க்கெஸ்ட் திரைப்படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேன், ரோமன் ஜெ இஸ்ரேல் படத்தில் நடித்த டென்ஸெல் வாஷிங்டன் உள்ளிட்டோர் சிறந்த நடிகருக்கான போட்டியில் இருக்கிறார்கள். சிறந்த நடிகைக்கான விருக்காக தி ஷேப் ஆப் வாட்டர் திரைப்படத்தில் நடித்த சாலி ஹாக்கின்ஸ், தி போஸ்ட் திரைப்படத்தில் நடித்த மெரீஸ் ஸ்ட்ரீப் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறந்த துணை நடிகை மற்றும் துணைநடிகர் ஆகிய பிரிவுகளில் தி ஷேப் ஆப் வாட்டர் திரைப்படத்தில் நடித்தவர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் சிலி, லெபனான், ரஷ்யா, ஹங்கேரி, ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தி லாஸ்ட் மென் இன் அலெப்போ என்ற படம் சிறந்த ஆவணப் படப் பிரிவிலும், தி சைலன்ட் சைல்ட் படம் சிறந்த குறும்படத்துக்கான பிரிவிலும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

மிகப் பிரமாண்டமான பின்னணிக் களத்தை காட்சிப்படுத்திய டன்கர்க், தி ஷேப் ஆப் வாட்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் கலை இயக்கத்துக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. த்ரீ பில்போர்ட்ஸ் இயக்குநர் மார்ட்டின் மெக்டோனா சிறந்த இயக்குநருக்கான பட்டியலில் இடம்பெறாதது புருவங்களை உயரச் செய்திருக்கிறது. மட்பவுன்ட் திரைப்படத்தில் பணியாற்றி ரேச்சல் மாரிசன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்படுகிறார். இந்தப் பெருமையைப் பெறும் முதல் பெண் இவர்தான்.

இதேபோல், லேடி பேர்ட் திரைப்படத்துக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இயக்குர் க்ரேதா கெர்விக், ஆஸ்கர் பரிந்துரையைப் பெறும் ஐந்தாவது பெண் இயக்குநர். இதேபோல் ஷசாங் ரிடெம்சன் படத்தில் பணியாற்றிய பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் டீக்கின்ஸ் 14-ஆவது முறையாக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பரிந்துரையைப் பெற்றிருக்கிறார். இதுவரை ஒருமுறைகூட ஆஸ்கர் விருதைப் பெறாத அவருக்கு, இந்த முறையாவது கிடைக்க வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com