ஒசாமா பின்லேடனின் மகன்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில் ஒசாமா பின்லேடனின் மகன்களை அமெரிக்கா கண்காணித்து வருகிறது. ஒசாமா பின்லேடனின் 11 மகன்கள் அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பின் லேடனின் வாரிசாகக் கருதப்படும் ஹம்சா பின் லேடன், கடந்த 2014 -ஆம் ஆண்டு அல்-குவைதா உறுப்பினரானார். இதையடுத்து சர்வதேசப் பயங்கரவாதியாக ஹம்சா பின் லேடன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹம்சா பின் லேடன் தற்போது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவல்களின் அடிப்படையில் அவரது நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் பெயரிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

