“சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா”: சேட்டை செய்த வாலிபனின் சட்டையை கழட்டிய ஒராங்குட்டான்!
மிருகக்காட்சி சாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒராங்குட்டான் குரங்கு ஒன்று பார்வையாளரான வாலிபரை பிடித்து அவரது உடைகளை பறிக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரையில் சுமார் 14 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு திடுக்கிட செய்திருக்கிறது.
இந்தோனேஷியாவின் கசங் குலிம் என்ற zoo-ல் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு ஹசன் அர்ஃபின் என்ற 19 வயது வாலிபர் ஒருவர் டினா என்ற ஒராங்குட்டான் இருக்கும் கூண்டுக்கு முன் சென்று சேட்டை செய்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அந்த ஒராங்குட்டான் குரங்கு கூண்டில் இருந்த படியே ஹசனை பிடித்து இழுத்து அவர் அணிந்திருந்த ஆடைகளை கழட்ட முயற்சித்திருக்கிறது.
அருகே இருந்தவர் ஒராங்குட்டானிடம் இருந்து ஹசனை காப்பாற்ற முயன்றிருக்கிறார். அப்போது அவரையும் டினா பிடித்து இழுத்ததால் பயந்துப்போய் பின்வாங்கி வேறு பக்கம் சென்று ஹசனை மீட்க போராடினார்.
ஒருவழியாக ஒராங்குட்டான் பிடியை தளர்த்தியதால் ஹசன் அஃப்ரின் தப்பித்தார். இந்த சம்பவம் மிருகக்காட்சி சாலையில் இருந்தவர்களிடையே பெரும் மிரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஜூன் 6ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ zoo-ல் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. அதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள zoo நிர்வாகம், “எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதுபோன்று மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

