\
Oracle Company announces layoffs
Oraclereuters

’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!

ஏஐ அபரிமிதமான வளர்ச்சியால், முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்து வருவது ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை (Layoff Emails) அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 14 அன்று இதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, இணைய வர்த்தக உலகில் முன்னணியில் இருக்கும் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும் AI உந்துதல் தீர்வுகளை நோக்கி நகர்வதிலும் ஒவ்வொரு நிறுவனங்களும் கவனம் செலுத்துகின்றன. செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்திறனில் கவனம் செலுத்துவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிறுவனங்கள் விளக்கமளிக்கின்றன.

Oracle Company announces layoffs
Oraclereuters

இந்த நிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை (Layoff Emails) அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு முன்அறிவிப்பின்றி, பணிநீக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலமாக நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன.

Oracle Company announces layoffs
1,000 இந்திய ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அமேசான்.. காரணம் இதுதான்!

செப்டம்பர் 14 அன்று நடந்த ஆட்குறைப்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ‘உங்கள் பதவி தொடர்பாக சில கடினமான செய்திகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். ஆரக்கிளின் தற்போதைய வணிகத் தேவைகளைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, ஒரு விரிவான நிறுவன மாற்றத்தின் ஒரு பகுதியாக உங்கள் பதவியை நீக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் விளைவாக, இன்றுதான் உங்கள் கடைசி வேலை நாள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oracle Company announces layoffs
Oraclereuters

அதேநேரத்தில், அவர்களின் பணிநீக்கத்திற்கான எந்தவொரு காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. எனினும், ஆரக்கிளின் பணிநீக்கத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி தற்காலிக இழப்பீட்டுத் தொகை (Severance Package), மருத்துவக் காப்பீடு நீட்டிப்பு மற்றும் புதிய வேலை தேடுவதற்கான உதவிகள் வழங்கப்படும் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ அபரிமிதமான வளர்ச்சியால், முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்து வருவது ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Oracle Company announces layoffs
900 ஊழியர்கள் பணி நீக்கம்.. அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிரடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com