அமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா

அமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா
அமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே கலிஃபோர்னியாவில் நிலச்சரிவு பாதிப்பு தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா பார்பரா பகுதியில் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சான்டா பார்பரா குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு மோசமாக தாக்கியுள்ளது. இதே பகுதியில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே வசித்து வருகிறார். அவர் தன் வீட்டுத்தோட்டத்தில் ஆழமான சேறு மற்றும் குப்பைகளில் நடந்து செல்லும் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதே பகுதியில்தான் தொலைக்காட்சி நடிகர் எலென் டிஜெனரஸ், நடிகர் ரோப் லோவ் உள்ளிட்ட பிரபலங்கள் வசித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com