ஓமன் நாட்டை ஜொலிக்க வைத்த மன்னர் காபூஸ் காலமானார் !

ஓமன் நாட்டை ஜொலிக்க வைத்த மன்னர் காபூஸ் காலமானார் !

ஓமன் நாட்டை ஜொலிக்க வைத்த மன்னர் காபூஸ் காலமானார் !
Published on

பாலைவனமாக இருந்த ஓமன் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு மன்னர் சுல்தான் காபூஸ் 79 வயதில் காலமானார்.

1970-களில் தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். எண்ணெய் வளமே ஓமனின் மூலதனம் என புரிந்துக்கொண்டு. அதனை வைத்தே நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினார். இவர் தனது 29 ஆவது வயதில் ஆட்சிக்கு வந்து 40 ஆண்டுகாலம் ஓமன் மன்னராக இருந்தார். காபூஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு அடுத்த அரசர் யார் என்பதையும் அறிவிக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த மன்னர் யார் என்று காபூஸ் அறிவிக்காததால் அந்நாட்டு வழக்கப்படி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் நாளைக்குள் கூடி புதிய சுல்தானை தேர்வு செய்வார்கள். சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

காபூஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் அதில் " சுல்தான் காபூஸ் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். ஓமன் மன்னர், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். ஓமனை நவீன, செழுமைமிக்க நாடாக மாற்றியவர் சுல்தான் காபூஸ். ஓமனுக்கும் உலகுக்கும் சமாதானத்தின் கலங்கரை விளக்கமாக சுல்தான் காபூஸ் திகழ்ந்தார்".

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com