\
தென்கொரிய மக்களை ஈர்க்கும் வடகொரிய சின்னங்கள்

தென்கொரிய மக்களை ஈர்க்கும் வடகொரிய சின்னங்கள்

தென்கொரிய மக்களை ஈர்க்கும் வடகொரிய சின்னங்கள்
Published on

வடகொரியாவின் சின்னங்களை பிரதிபலிக்கும் பொருட்களை வாங்க தென்கொரிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நாளை தொடங்குகிறது. இந்தப்போட்டிகள் நாளை முதல் பிப்ரவரி 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் தொடர்பான பொருட்கள் தென்கொரியாவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் சின்னங்கள், கொடிகள், தலைவர்களின் முகம் பொறிக்கப்பட்ட டாலர்களை சேகரிக்கும் வித்தியாசமான பழக்கம் கொண்டவர்கள் தென்கொரியாவின் விற்பனை நிலையங்களில் முகாமிட்டுள்ளனர். இதில் வடகொரியா தொடர்பான சின்னங்களை சேகரிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com