நியூசிலாந்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்கிறது ஓலா!

நியூசிலாந்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்கிறது ஓலா!
நியூசிலாந்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்கிறது ஓலா!

ஷேர் ஆட்டோபோல பயணத்திற்கான கட்டணத்தை பயணிப்பவர்கள் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது வாடகை கார் நிறுவனமான ஓலா கேப்ஸ். இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் விரைவில் தீவு தேசமான நியூசிலாந்தில் எலக்ட்ரானிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

காற்றில் கலந்துள்ள கார்பனை குறைக்கும் வகையில் நியூசிலாந்து அரசாங்கம் இயங்கி வருகிறது. அதன்படி வரும் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 64000 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சாலை பயன்பாட்டில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. அதனை இலக்காக வைத்து ஓலா நிறுவனம் நியூசிலாந்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆம்ஸ்டர்டாமில் இயங்கிய எடர்கோ நிறுவனத்தை வாங்கிய ஓலா நிறுவனம் அதன் ஊடாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. 

“பேரண்டத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருவது காலநிலை மாற்றம் தான். அந்த பாதிப்புகளை தடுக்க 0 கார்பன் பயன்பாட்டை நியூசிலாந்து அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. அதில் எங்களது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார் ஓலா குழுவின் சி.இ.ஓ பவிஷ் அகர்வால். 

ஆண்டுக்கு இரண்டு மில்லியன் எலக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களை தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ ஓலா முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com