நைஜீரியா: எண்ணெய் டேங்கர் வெடித்து 20 பேர் பலி! தீப்பிழம்பும் கரும்புகையுமாய் சாலைகள்..!

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்ததில், 20 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நைஜீரியா விபத்து
நைஜீரியா விபத்துட்விட்டர்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. இங்குள்ள ஒண்டோ மாகாணத்தில் இன்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 குழந்தைகள், 1 கர்ப்பிணி உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து குறித்து அங்குள்ள ஊடகங்கள், “இந்த தீ விபத்தால், லாகோஸ்-பெனின் விரைவுச் சாலை கடுமையாக்கப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளன. டேங்கர் வெடித்துச் சிதறிய விபத்தால், அப்பகுதியே தீப்பிழம்புடன் காட்சியளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இங்கு ஒருநாளைக்கு சுமார் இரண்டு மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், இதுபோன்ற எண்ணெய் விபத்துகள் இங்கு அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com