\
ரங்க ராட்டினம் அறுந்து விழுந்து ஒருவர் பலி

ரங்க ராட்டினம் அறுந்து விழுந்து ஒருவர் பலி

ரங்க ராட்டினம் அறுந்து விழுந்து ஒருவர் பலி
Published on

அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினத்தின் ஒரு பகுதி திடீரென அறுந்து கீழே விழுந்ததில் ஒருவர் பலியானார்.

அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் ஒஹாயோ ஸ்டேட் ஃபேர் என்ற கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சி நிகழ்வில் பல்வேறு வகையான பொழுதுபோக்கு விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தது. அதில் பல அடி உயரத்தில் பார்வையாளர்களை ஏற்றிக் கொண்டு சுற்றும் ரங்க ராட்டின சவாரியும் இடம் பெற்றிருந்தது.

ராட்டினம் பல அடி உயரத்தின் மேலே இருந்தபோது அதன் ஒரு பகுதி திடீரென தனியாக முறிந்து கீழே விழுந்தது. ராட்டினத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பகுதி மக்கள் மேலிருந்து கீழே விழுந்தனர். இதில் 18 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com