அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள மெக்கின்லி உயர்நிலைப் பள்ளிக்கு திடீரென சென்ற முன்னாள் அதிபர் ஒபாமா வருகை தந்ததால், மாணவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் அந்தப் பள்ளிக்குச் சென்ற ஒபாமா மாணவர்களிடம் மிகுந்த அன்புடன் உரையாடினார். அவர்களது வாழ்க்கை லட்சியம், உயர்கல்வி, சமூகப்பணி ஆகியவை குறித்து மிகுந்த ஆர்வமுடன் கேட்டறிந்தார். இன்றைய இளம் தலைமுறையினரால் மட்டுமே உலகத்தில் நடக்கும் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்பதை தாம் வெகுவாக நம்புவதாக ஒபாமா மாணவர்களிடம் தெரிவித்தார்.

