\
Jensen Huang Controversy: Nvidia VP Video and NDA Row
Jensen HuangPTI

சீனப் பெண்ணை தொடர்ந்து துணைத் தலைவர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. பெரும் சிக்கலில் என்விடியா CEO!

சீனப் பெண்ணை தொடர்ந்து என்விடியா நிறுவன CEO ஜென்சன் ஹுவாங், அந்நிறுவனத்தின் துணைத் தலைவருடன் நெருக்கமாக இருந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

என்விடியா நிறுவன CEO ஜென்சன் ஹுவாங் (Jenson Huang), அந்நிறுவனத் துணைத் தலைவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவைப் பதிவு செய்தவரிடம் ரகசிய காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஜென்சனின் பாதுகாப்புப் படையினர் வலியுறுத்தியதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

சீனாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் மீது குற்றசாட்டுகள் எழுந்தன. அந்தப் பெண் ஒரு சீன உளவாளியாக இருக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை சந்தேகிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, ஜென்சன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தனது ஊழியர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, என்விடியாவின் வாரியம் (board) சுயாதீன விசாரணையைத் தொடங்கியது. 

Jensen Huang
Jensen HuangPTI

இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக என்விடியாவின் துணைத் தலைவரான கிம்பர்லி பவல் (Kimberly Powell) என்பவருடன்  ஜென்சன் ஹுவாங் நெருக்கமாக இருந்த காட்சிகளும், அதனை வீடியோ எடுத்த நபர் மிரட்டப்பட்டதாகவும் வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம், என்விடியாவின் வருடாந்திர டெவெலப்பர்கள் மாநாட்டின்போது, கலிஃபோர்னியாவில் உள்ள ஹோட்டலில், என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் மற்றும் அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம்பர்லி பவல் ஆகியோர் நெருக்கமாக இருப்பதை செல்போனில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்த்துள்ளார். இதையடுத்து, அந்த நபரை அணுகிய ஹுவாங்கின் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள், அவர் பார்த்ததை வெளியே தெரிவிக்கக் கூடாது என்பதற்காக ரகசியக் காப்பு ஒப்பந்தத்தில் (NDA) கையெழுத்திடுமாறு வற்புறுத்திய தகவலை நியூயார்க் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.

48 வயதான கிம்பர்லி பவல், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் என்விடியாவில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் அந்நிறுவனத்தின் சுகாதாரத் தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார் என்பதும் இவருக்கு திருமணம் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PTI

மேலும், இதுகுறித்து அணுகியபோது இந்த விவகாரம் குறித்து ஜென்சன் ஹுவாங், கிம்பர்லி பவல் மற்றும் என்விடியா நிறுவனம் ஆகிய மூன்று தரப்பினரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனப் பெண்ணுடன் இருந்த உறவு, என்விடியா சிப்கள் சீனாவிற்கு கடத்தப்பட்டதை போன்ற  சர்ச்சைகளால் ஜென்சன் ஹுவாங்கின் சந்தை மதிப்பு பல பில்லியன் டாலர்கள் சரித்துள்ளது. தற்போது தொடர்ந்து வரும் குற்றச்சாட்டுகளால் ஜென்சன் ஹுவாங்க், தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.