காதலரின் மனைவியை கொல்ல கூலிப்படை: கேரள நர்ஸ் அமெரிக்காவில் கைது!

காதலரின் மனைவியை கொல்ல கூலிப்படை: கேரள நர்ஸ் அமெரிக்காவில் கைது!

காதலரின் மனைவியை கொல்ல கூலிப்படை: கேரள நர்ஸ் அமெரிக்காவில் கைது!
Published on

காதலரின் மனைவியை கொல்வதற்குக் கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள நர்ஸ் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் டினா ஜோன்ஸ். வயது 31. இவர் அமெரிக்காவின் இலினாஸில் உள்ள லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நர்சாக பணிபுரிகிறார். இதே மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருடன் டினாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம், நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. அந்த டாக்டருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்ட து. அவர் மனைவியும் அதே மருத்துவமனையில்தான் மயக்க மருந்து பிரிவில் பணிபுரிகிறார். 

இந்நிலையில், தான் டாக்டருடன் நெருக்கமாகப் பழகிவருவது அவர் மனைவிக்குத் தெரிந்துவிட்டதோ என டினாவுக்கு சந்தே கம். இதனால் அவர் மனைவியை கொல்ல முடிவு செய்தார், டினா. இதற்காகக் கூலிப்படையை தேடியிருக்கிறார். இதற்கென இணையதளம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அதில் 10 ஆயிரம் டாலர் பிட்காயின் கட்டி, டாக்டர் மனைவியை கொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த ஆன்லைன், போலி என்பது பிறகுதான் தெரிய வந்திருக்கிறது. 

இதற்குள் போலீசாருக்கு தகவல் தெரிந்து டினாவை அமுக்கி விட்டனர். கைதான டினா, ஜாமினில் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். குற்றம் நிரூபணமானால், அவருக்கு இருபது வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com