\
Nuclear weapons in space NATO chief warns as Russia alarms the world
Putinreuters

விண்வெளியில் அணு ஆயுதம்? ரஷ்யாவால் அதிரும் உலகம்!

'ஸ்புட்னிக்-எஸ்' (Sputnik-S) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோளில் அணு ஆயுதம் பொருத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அணு ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஜெர்மனியின் NDR, WDR தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அடுத்த 60 நாட்களுக்குள் ரஷ்யா இந்தச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

sputnik
sputnikreuters

'ஸ்புட்னிக்-எஸ்' (Sputnik-S) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோளில் அணு ஆயுதம் பொருத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கம் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களைச் செயலிழக்கச் செய்வது அல்லது முற்றிலுமாக அழிப்பது எனக் கூறப்படுகிறது.

இன்றைய உலகில் ராணுவ நடவடிக்கைகள் முதல் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் வழிகாட்டுதல், உளவுப் பணிகள் வரை அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் மிகவும் அவசியம்.

குறிப்பாக, எதிரி நாடுகளின் ஏவுகணை நகர்வுகளைக் கண்காணிப்பது, ராணுவத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது போன்ற முக்கியப் பணிகள் செயற்கைக்கோள்கள் மூலமாகவே நடைபெறுகின்றன.

satellite
satellite rteuters

இப்படிப்பட்ட செயற்கைக்கோள்களை ரஷ்யா அணு ஆயுதம் மூலம் அழித்துவிட்டால், ஒரே நேரத்தில் பல நாடுகளின் தகவல் தொடர்பு மற்றும் ராணுவக் கண்காணிப்பு அமைப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதையடுத்துப் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, நேட்டோவின் ஒவ்வொரு அங்குலப் பகுதியையும் பாதுகாப்போம் என்றும், விண்வெளியில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும், விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிடுவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷ்ய தூதரகம் இத்தகவல்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும், மேற்கத்திய நாடுகளின் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.

1967-ம் ஆண்டு கையெழுத்தான சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிலைநிறுத்தத் தடை உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் உலக நாடுகளிடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Nuclear weapons in space NATO chief warns as Russia alarms the world
இஸ்ரேல்| பேச்சுவார்த்தை தோல்வி.. ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி!