உலகம்
அணு உலை மீண்டும் இயக்கம் - அணு ஆயுதங்களை தயாரிக்கிறதா வடகொரியா?
அணு உலை மீண்டும் இயக்கம் - அணு ஆயுதங்களை தயாரிக்கிறதா வடகொரியா?
வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக அணு உலைகளை இயக்க தொடங்கியுள்ளதாக ஐ.நா. அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
வடகொரியா தலைநகர் பியாங்யாங்கின் வடக்கு நகரில் உள்ள 5 மெகாவாட் திறனுடைய அணு உலையில், அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியாகியுள்ளன. இதற்கு முன்னோட்டமாக கடந்த ஜுன் மாதம் முதலே அணு உலையில் இருந்து குளிர்ந்த நீர் வெளியேற்றப்படுவதாகவும் அணுசக்தி முகமை கூறியுள்ளது. வடகொரியா கடைசியாக 2017 ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியிருந்தது.