நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்

நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்

பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதியவர்கள் 23 பேர் இறந்துவிட்ட சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது

பைசர் தடுப்பூசி செலுத்தப்பெற்ற 23 முதியவர்கள் உயிரிழந்ததாக நார்வே அரசு தெரிவித்துள்ளது. 23 பேரைத் தவிர, தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த இறப்புகள் குறித்து விசாரணையை நார்வே அரசு முடுக்கிவிட்டுள்ளது.

ஏற்கெனவே பலவீனமான உடலைக் கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பாதகமான எதிர்வினைகள் இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஃபைசர் தடுப்பூசிக்கும் இந்த மரணங்களுக்கும் நேரடி தொடர்பு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இறந்த 23 பேரில் 13 பேர் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளின் பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

நார்வேயில் ஏற்பட்ட இந்த மரணங்கள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதன் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர்  முடிவு செய்தது. மேலும் 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எதிராக நார்வே பொது சுகாதார நிறுவனம் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

எப்படியிருந்தாலும் குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்கள் தடுப்பூசியால் பெரிதும் பயனடையமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் இருந்து இதுவரை நார்வேயில் பைசர் மற்றும் மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை 30,000-க்கும் மேற்பட்டோர் பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com