அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அரசு ஊடகம் கண்டனம்

அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அரசு ஊடகம் கண்டனம்
அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அரசு ஊடகம் கண்டனம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ ட்ரம்ப் அவமதித்து விட்டதாகவும், இதனால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் எனவும் வடகொரிய அரசு ஊடகத்தி‌ல் செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியாவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதுதொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்கொரியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர், கொரிய நாடுகளின் எல்லைப் பகுதியை பார்வையிடும் பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பியது அவரது கோழைத்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. 
தென்கொரியாவுக்கு  வந்ததுடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வடகொரிய அதிபரை சர்வாதிகாரி என பழித்துப் பேசிவிட்டு சென்றதும் வட கொரியாவை மிகுந்த ஆவேசம் அடையச் செய்ததாகவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது. அத்துடன் வடகொரிய அதிபரை அவமதித்த ட்ரம்புக்கு, மரண தண்டனை கிடைக்கும் எனவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com