உலகம்
இலையுதிர் கால மராத்தான்: முதல் முறையாக நடத்தியது வடகொரியா
இலையுதிர் கால மராத்தான்: முதல் முறையாக நடத்தியது வடகொரியா
வடகொரியாவில் முதல் முறையாக இலையுதிர் கால சர்வதேச மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.
வடகொரியாவில் முதல் முறையாக நடந்த இலையுதிர் கால மராத்தான் போட்டியில் நெதர்லாந்து, ஸ்வீடன், செக் குடியரசு, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த 240 போட்டியாளர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ஓடினர். 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வழக்கமாக கோடை காலத்தில் மட்டுமே வடகொரியா மராத்தான் போட்டிகளை நடத்தும். தற்போது முதல் முறையாக இலையுதிர் காலத்தை முன்னிட்டு இப்போட்டியை நடத்தியுள்ளது.