ஐ.நா.வில் முதல் முறையாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்ற வந்தபோது, வடகொரிய தூதர் திடீரென அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
முன்னதாக பிற நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அவையில் உரையாற்றியதை கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த வடகொரிய தூதர் ஜா சாங் நாம், ட்ரம்ப் மேடைய ஏறியதை கண்டதும், அங்கிருந்து வெளியேறி சென்றார். வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவே காரணம் என்பதாலும் அணு ஆயுத சோதனைகளை நிறுத்தும்படி வலியுறுத்தி வருவதாலும், ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜா சாங் நாம் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.