உலகம்
பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தால் அமெரிக்கா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
இந்த வாரத்தில் நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா வலியுறுத்த இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் அதற்கான விலையை அமெரிக்கா தர வேண்டியிருக்கும் என வடகொரிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அணுஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியா மீeது புதிதாக பொருளாதார தடைகளை விதிக்க ஓட்டெடுப்பு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.