வடகொரிய அச்சுறுத்தல்: ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்த ஜப்பான் திட்டம்
வடகொரியாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
டோக்கியோவில் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பானின் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டுப் பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஜப்பான் விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட்டது. இதேபோல் அமெரிக்காவுடனான கூட்டுப் பயிற்சியை அதிகப்படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனையால் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகியவை அதிகம் அச்சமடைந்துள்ளன. ஆகையால், வடகொரியாவை எதிர்கொள்ள அவை அமெரிக்காவுடன் இணைந்து வியூகம் வகுத்து வருகின்றன.

