கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை; வடகொரியா சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை; வடகொரியா சோதனை
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை; வடகொரியா சோதனை

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகளை அமல்படுத்தி இருக்கும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது அமெரிக்காவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

வடகொரியாவின் முபியாங் - நி என்ற இடத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவகணை ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ‌சென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவ அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். வடகொரியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை அந்நாடு அப்பட்டமாக மீறியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com