ஒரே நாளில் 23 ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை

வட கொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை விண்ணில் செலுத்திசோதனை செய்தது. தென் கொரியாவும் ஏவுகணைகளைச் செலுத்தி பதிலடி கொடுத்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புகளை மீறி வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கடந்த திங்கள்கிழமை கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வட கொரியா, தற்போது ஒரே நாளில் 23 ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வடகொரியா செலுத்திய ஒரு ஏவுகணை தென் கொரியாவின் கடற்பகுதியில் விழுந்தது. கொரிய நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு தென் கொரிய கடல் பகுதியில் ஏவுகணை விழுந்துள்ளது இது முதன்முறை. இதற்கு தென் கொரியா அதிபர் யூன் சுக்-இயோல் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது பிராந்தியஆக்கிரமிப்புக்குச் சமம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இரு கொரிய நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை அரசியல் ரீதியில் தீர்த்துக்கொள்ளும் என்று நம்புவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com