\
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
Published on

வடகொரியா மீண்டும் ஏவுகனை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

ஓடும் ரயிலில் இருந்தும் நீர் மூழ்கி கப்பலில் இருந்தும் ஏற்கனவே ஏவுகணையை ஏவி வடகொரியா பரிசோதித்தது. இந்த நிலையில் வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. எனினும் தனது ஏவுகணை சோதனையை வடகொரியா நிறுத்தவில்லை. கிழக்குக் கடல்பகுதியில் ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனையில் ஈடுபட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதி மற்றும் ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. புத்தாண்டுக்கு பிறகு வடகொரியாவின் முதல் ஏவுகணை சோதனையாக இது அமைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com