துண்டுப் பிரசுரங்கள் வீசியதற்குப் பதிலடி.. 700 குப்பைப் பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பிய வடகொரியா!

அண்டை நாடான தென்கொரியா எல்லைக்குள் மீண்டும் ராட்சத பலூன்களுக்குள் குப்பைகளை கட்டி வடகொரியா அனுப்பி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குப்பை பலூன்
குப்பை பலூன்எக்ஸ் தளம்

வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு. இப்படி, பல வினோத கட்டுப்பாடுகள் இருக்கும் வடகொரியா அடிக்கடி ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து வருகிறது. இந்த நிலையில், அண்டை நாடான தென்கொரியா எல்லைக்குள் மீண்டும் ராட்சத பலூன்களுக்குள் குப்பைகளை கட்டி வடகொரியா அனுப்பி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் (ஜூன் 2) மதியம் 1 மணி வரை தலைநகர் சியோலில் 700க்கும் மேற்பட்ட குப்பைப் பலூன்களை வடகொரியா பறக்கவிட்டதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையும் படிக்க:“பிறர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்கு தெரியவில்லை”- நடிகர் பிரகாஷ்ராஜ்

குப்பை பலூன்
2 ராட்சத பலூன்களில் குப்பைகள்.. தென்கொரியா எல்லைக்கு அனுப்பியதா வடகொரியா?

இந்த பலூன்களில் சிகரெட் துண்டுகள், துணிகள், காகிதக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. வடகொரியாவிற்கு எதிரான வாசகங்களுடன் தென்கொரியாவில் இருந்து வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்களுக்கு பதிலடியாக இந்த பலூன்கள் வீசப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரியா மீண்டும் வடகொரியாவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைப் பறக்கவிட்டால், தொடர்ந்து குப்பைப் பலூன்கள் அனுப்பப்படும் எனவும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாத இறுதியில், இரண்டு ராட்சத பலூன்களுக்குள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பேட்டரிகள், ஷூ பகுதிகள், கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கைமாறும் CSK.. கைப்பற்றப் போகிறதா அதானி குழுமம்? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன?

குப்பை பலூன்
பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை.. வடகொரியா அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com