வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க, வேண்டுமென்றே இந்த சோதனையை வடகொரியா நடத்தி இருப்பதாகவும், எனவே பதற்றத்தை தணிக்க உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தகைய நடத்தையை சர்வதேச சமூகம் சகித்துக் கொண்டிருக்காது என்றும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை அனுப்பியுள்ளது.