மேடையிலே அழுத ‘கிம் ஜாங் உன்’ : கண்ணீர் விட்ட வடகொரிய மக்கள்..!

மேடையிலே அழுத ‘கிம் ஜாங் உன்’ : கண்ணீர் விட்ட வடகொரிய மக்கள்..!
மேடையிலே அழுத ‘கிம் ஜாங் உன்’ : கண்ணீர் விட்ட வடகொரிய மக்கள்..!

கட்சி விழாவின்போது மேடையில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ வீரர்களின் தியாகத்திற்காக கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அந்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வடகொரியாவின் ஆளும் கட்சியான கொரிய உழைப்பாளிகள் கட்சியின் 75வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், அண்மையில் வடகொரியாவை தாக்கிய புயல்களுக்கு இடையே மீட்புப்பணிகளில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக கண்ணீர் சிந்தினார்.

அத்துடன், “எனது முயற்சி மற்றும் முடிவுகளுக்கு மக்கள் எப்போதும் ஆதரவளிக்கின்றனர். முடிவு எதுவாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். என்னை எப்போதும் முழுவதுமாக நம்புகின்றனர். அவர்களின் உயிரை காப்பதில் நான் முழு நேரப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் உயிரைக்காக்க தவறிவிட்டேன்” என்று கலங்கினார். அத்துடன் வடகொரியாவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை என்பதை பெருமையுடன் கூறுவதாக தெரிவித்தார்.

ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை என பல்வேறு நடவடிக்கைகளால் உலக நாடுகளை அச்சுறுத்திய கிம் ஜாங் உன், அந்த செயல்கள் மூலம் தனது நாட்டுக்கு பல பொருளாதார தடைகளை பெற்றுக்கொடுத்தவர். ஏற்கனெவே பொருளாதார சிக்கலில் இருந்த அந்நாடு, தற்போது கொரோனா முடக்கத்தால் மேலும் பொருளாதார சரிவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com